நள்ளிரவில் வெளியானது காங்கிரசு வேட்பாளர் பட்டியல்

2019 மக்களவைத் தேர்தலை தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருக்கிறது காங்கிரசு.

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 1 தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் காங்கிரசுக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நள்ளிரவில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அளவில் காங்கிரசுக் கட்சியின் ஏழாவது பட்டியல் அது. பல்வேறு மாநிலங்களில் போட்டியிடும் 35 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள அந்தப்பட்டியலில் தமிழகத்தில் எட்டு வேட்பாளர்களும் புதுவையில் ஒரு வேட்பாளரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி,

கிருஷ்ணகிரி – டாக்டர் ஏ.செல்லகுமார்

திருவள்ளூர் – டாக்டர் கே.ஜெயக்குமார்

ஆரணி – எம்.கே.விஷ்ணு பிரசாத்

கரூர் – ஜோதிமணி

திருச்சி – சு.திருநாவுக்கரசர்

விருதுநகர் – மாணிக்கம் தாகூர்

கன்னியாகுமரி – ஹெச்.வசந்தகுமார்

தேனி- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

சிவகங்கை தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை.

புதுவை – வைத்தியலிங்கம்

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response