7 இல் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாமக

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.திமு.க கூட்டணியில் பா.ம.க போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு தர்மபுரி, அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் ஆகிய ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மார்ச் 17 இரவில் பாமகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

இதன்படி,

தருமபுரி – அன்புமணி ராமதாஸ்,

விழுப்புரம் – வடிவேல் ராவணன்,

கடலூர் – கோவிந்தசாமி,

அரக்கோணம் – ஏ.கே.மூர்த்தி,

மத்திய சென்னை – சாம் பால்

ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திண்டுக்கல் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர் அற்விக்கப்படவில்லை.

Leave a Response