75வயதானஒருவரின்காதல்தேடுதல்.

டூரிங்டாக்கிஸ்படத்தின்முதல்பாதிஇடைவேளைவரைஒருகதை. 75வயதானஒருவரின்காதல்தேடுதல். அந்தக்கதாபாத்திரத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்திருப்பது தெரிந்தவிஷயம். இடைவேளைக்குப் பிறகு வரும்படம் முதல்கதையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு அழுத்தமான கிராமத்துப்பெண்ணின் கதையாகும். இந்த, கனமான கதாபாத்திரத்தில் கேரளநடிகை சுனுலட்சுமி வாழ்ந்திருக்கிறார்.

இந்தக்கதையில் சமூகத்தில் நடக்கும் கொடுமைகளுக்குச் சாட்டையடி கொடுத்திருக்கிறார் இயக்குனர்எஸ்.ஏ.சந்திரசேகரன்.

இன்று நாட்டில் நடக்கும் வன்கொடுமைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்திருக்கிறார்.

இந்த இராண்டாவதுகதைக்கு மட்டும் இசைஞானிஇளையராஜா 10 நாட்கள் இசையமைத்திருக்கிறார். வசனமே இல்லாத பலகாட்சிகளை உருக்கமான பாடல்வரிகளால் பின்னணிஇசை அமைத்திருக்கிறார்.

இரண்டுகதைகளிலும் மொத்தம் ஏழுபாடல்கள். இதில்இளையராஜா, இசையமைப்பாளர்விஜய்ஆண்டனி,கேரளஇசையமைப்பாளர்ஷரத்,நடிகர்விவேக், நடிகர்சத்யன்  ஆகியோர் பாடியிருப்பது சிறப்புச்செய்தி.

படத்தொகுப்பை ஸ்ரீகர்பிரசாத்தும், ரஜிஷும்செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவுஅரூண்பிரசாத்.

எந்தப்படத்தையும் குறுகியகாலத்தில் முடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரன் இந்தப்படத்தை இரண்டுஆண்டுகளாக உழைத்து மிகுந்த பொருட்செலவில் எடுத்திருக்கிறார்.

ஒருபடத்தில்வேறுபட்டஇரண்டுகதைகள்என்பதுரசிகர்களுக்குமட்டுமல்ல. தமிழ்திரையுலகிற்கும்ஒருபுதுமையானமுயற்சியாகும்.

Leave a Response