ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி மகத்தான சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம்

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய மட்டைப்பந்தாட்ட அணி, நான்கு போட்டிகள் கொண்ட ஐந்துநாள் தொடரில் பங்கேற்றது.

முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 622/7 (‘டிக்ளேர்’), ஆஸ்திரேலியா 300 ஓட்டங்கள் எடுத்தன. ஆஸ்திரேலிய அணிக்கு ‘பாலோ-ஆன்’ வழங்கப்பட்டது.

மழையால் பாதிக்கப்பட்ட நான்காம் நாள் முடிவில் 2 ஆவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்தது.

இன்றைய 5 ஆம் நாள் ஆட்டம் மழையால் முழுமையாக இரத்தானது.

இதனையடுத்து நான்கு போட்டிகள் கொண்ட ஐந்துநாள் தொடரை இந்திய அணி 2-1 என்கிற அடிப்படையில் கைப்பற்றி கோப்பை வென்றது.

ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய புதிய வரலாறு படைத்துள்ளது இந்திய அணி.

இதற்கு முன், 11 முறை டெஸ்ட் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி, 8 முறை தொடரை இழந்தது. மூன்று முறை தொடரை ‘டிரா’ செய்திருந்தது.

இப்போது தொடரை இந்திய அணி கைப்பற்றியதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Response