நக்கீரன்கோபால் திடீர் கைது – நிர்மலாதேவி காரணமா?

நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் இருந்து தன் நீண்டகால நண்பரைச் சந்திக்க புனே செல்லவிருந்த நக்கீரன் கோபாலை இன்று காலை ஒன்பது மணியளவில் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆளுநர் பணியில் தலையிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் மீது என்ன வழக்கு? எந்தெந்தப் பிரிவுகளில் வழக்கு என்பது பற்றி அதிகாரப்பூர்வதகவல் இல்லை.

அதேசமயம், மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநருக்குச் சம்பந்தம் இருப்பதாகச் செய்திகள் வெளியிட்டதால் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Response