குறுந்தகவல் அனுப்பினால் போதும், குறைகள் தீரும்– ஈரோடு மாவட்ட ஆட்சியரின் புது முயற்சி.

மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கத் தேவையில்லை. ஒரு குறுந்தகவல் அனுப்பினால் போதும். 24 மணி நேரத்திற்குள் பதில் வந்துவிடும். (மக்களின் சேவைக்கு முன் உதாரணம்)
“ஒரு மாதமாக, எங்க ஏரியா கார்ப்ரேஷன் குழாயில் தண்ணீர் வரவில்லைங்க. அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. கலெக்டருக்கு மனு மூலம் தெரியப்படுத்தலாம் என்று கலெக்டர் அலுவலகத்திற்குச் சென்றால் கூட்டம் அதிகமாக இருக்கிறது. வேலைக்கு செல்லாமல், கூட்டத்தில் நின்று மனுவை கொடுத்து வந்தேன். ஆனால், பதிலும் வரவில்லை. தண்ணீரும் வரவில்லை. வேலைக்கு செல்லாமல், மனுவை கொடுத்து என்ன பலன்”. என்று பலரும் ஆவேசப்படுவதைப் பார்த்திருப்போம்.
இதுபோன்று நிறையப் பேர், “கலெக்டரிடம் மனு கொடுத்தோம், பதிலும் இல்லை, நடவடிக்கையும் இல்லை” என்று சொல்லி வருகிறார்கள் அவர்களுக்கு, ஓர் நற்செய்தி.
எதற்காக மனு கொடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். (ஆன்ட்ராய்ட்) தொடுதிரை கைபேசியைப் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தமிழகத்தில் மட்டும் 75 விழுக்காடு பேர் தொடுதிரை கைபேசி
பயன்படுத்துகிறார்களாம்.
அதில், கட்செவ்வி அஞ்சல் (வாட்ஸ்அப்) மற்றும் முகநூல் (ஃபேஸ்புக்) வசதிகள் இருக்கும். அதன்மூலம், கலெக்டருக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பினால் போதும். 24 மணி நேரத்திற்குள் பதில் வந்துவிடுகிறது. பதில் மட்டும் இல்லைங்க?. அதற்கான நடவடிக்கைகளையும், உடனே செய்கிறார். (ஸ்மார்ட் மொபைல் இல்லாதவர்கள், கணினியை பயன்படுத்தியும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்).

தற்போது, ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகரன் மட்டுமே இந்தச் சேவையை செய்து வருகிறார். இவரைப் பார்த்து, மற்ற கலெக்டர்களும் இந்தச் சேவையை பின்பற்றுவார்கள் என்று நம்புகிறோம்.
என்ன செய்ய வேண்டும்?.
வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் +917806917007 என்கிற மொபைல் நெம்பருக்கு எஸ்.எம்.எஸ் செய்யலாம்.
ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள் “District Collector Erode” என்கிற பெயரில் இருக்கும் பக்கத்தில் பிரச்சனைகளை பதிவு செய்யலாம்.
குறிப்பு: சிறிய பிரச்சனைகளுக்கு 24 மணி நேரத்திற்குள் பதில் வந்துவிடும். பெரிய பிரச்சனைகளாக இருந்தால் பதிலுக்கு தாமதம் ஏற்படலாம்.

Leave a Response