பிக்பாஸ் இடத்தைப் பிடித்த அரண்மனைகிளி

பழைய தொடர்கள் சில முடிந்துவிட்ட நிலையில், புதிய தொடர்களை ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் தொடர் ‘அரண்மனை கிளி’. ராஜ்கிரண், மீனா நடிப்பில் 1993-ம் ஆண்டு ரிலீஸான படத்தின் பெயர் இது.

கன்னட சீரியல் நடிகர் தர்ஷன், மோனிஷா, நடிகை பிரகதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த தொடரில் வில்லியாக நீலிமா நடிக்கிறார். அணில் இயக்கியுள்ள இந்த தொடருக்கு, ஜான்சன் இசையமைத்துள்ளார்.

வருகிற 24-ம் தேதி முதல், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ‘அரண்மனை கிளி’ ஒளிபரப்பாகிறது. இதுவரை ‘பிக் பாஸ் 2’ ஒளிபரப்பாகி வந்த நேரத்தில் இந்த தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response