குமாரசாமி செய்ததை பழனிசாமி செய்வாரா? – மக்கள் ஏக்கம்

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை இறக்குமதி வரி, சுத்திகரிப்பு செலவு, எண்ணெய் நிறுவனங்களின் இலாபம், போக்குவரத்து செலவுகளை உள்ளடக்கி ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கான அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதனுடன் மத்திய அரசின் கலால் வரி மற்றும் ‘வாட்’ எனப்படும் மாநில அரசின் மதிப்பு கூட்டு வரி, ‘டீலர் கமிஷன்’ ஆகியவற்றை சேர்த்து பெட்ரோல், டீசலுக்கான சில்லறை விற்பனை விலை நிர்ணயிக்கப்படுகிறது.

அதன்படி நேற்று டில்லியில் பெட்ரோலின் அடிப்படை விலை 41.48 ரூபாய். அதனுடன் கலால் வரி 19.48 ரூபாய்; தமிழக அரசின் மதிப்பு கூட்டு வரி 20.77 ரூபாய்; டீலர் கமிஷன் 3.58 ரூபாய் சேர்த்து தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் விலை 85.31 ரூபாயாக இருந்தது. டீசல் அடிப்படை விலை 45.00 ரூபாய்; கலால் வரி 15.33 ரூபாய்; மதிப்பு

இன்று, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 85.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்து, டீசல் விலையும் 10 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மத்திய மாநில அரசுகள் வரிக்குறைப்பு செய்யவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆனால், மத்திய அரசு கலால் வரியைக் குறைக்காத நிலையில் மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்து வருகின்றன.

மக்களின் சுமையைக் குறைக்க கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைப்பதாக அம்மாநில முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

இதனால், தமிழகத்திலும் விலை குறைப்பை முதல்வர் பழனிசாமிஅமல்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது.

Leave a Response