
காவிரி நதிநீர் உரிமைக்காகத் தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் தமிழக தலைநகர் சென்னையில் நடைபெற்றுவந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மக்களைப் திசைதிருப்புவதாக அமைந்ததால், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தாமல் வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்துகொள்ளுங்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டும் தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகள் நடைப்பெற்றதால் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொலை முயற்சி வழக்குத் தொடரப்பட்டது. மேலும் கட்சியைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துவிட்டனர். அதே வழக்கில் நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் அவர்கள் கடந்த மே-18 அன்று சென்னை, பெருங்குடியில் நடைபெற்ற மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிவிட்டு இரவு அலுவலகம் திரும்புகையில் காவலர்களால் கைது செய்யப்பட்டு பின்னர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். கடந்த சூலை 04 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரைக் கழகத்தில் நீதிபதிகள் அமர்வில் நேர் நிறுத்தப்பட்டு சூலை 14 அன்று குண்டர் சட்டம் இரத்து செய்யப்பட்டதாக தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இன்று 24-07-2018 காலை 11 மணியளவில் புழல் சிறையிலிருந்து பிணையில் விடுதலையாகி வெளிவந்தார்.
சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தால் விவசாய நிலங்கள் மற்றும் வாழ்விடங்களை இழந்து வாடும் விவசாய மக்களைச் சந்தித்ததற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்து அறிவிக்கப்படாத அடக்குமுறையை செயற்படுத்தும் தமிழக அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி – அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைக்கப்பட்டனர்.
சிறையிலடைக்கப்பட்டவர்கள் விவரம் பின்வருமாறு:
இரா.அன்புத்தென்னரசன், க. பூபேஷ், வெ.சுகுமாறன், ஜா.மார்ட்டின், பா.ராச்முருகன், க.சிவக்குமார், இர.வெங்கடேசன், மு.பிரகாஷ், ப.வெங்கட், நா.சுரேஷ், மு.ராஜா, பெ.கோபால், நா.மணி, வீ.ஜெய்குமார், ஞா.சசி, க.கார்த்திக், க.இராஜேஷ், கி.சிவராமகிருஷ்ணன், சூ.சசிக்குமார் மற்றும் ச.சுதர்சன்
அதேபோல் 19-07-2018 அன்று நாம் தமிழர் கட்சி – திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் வழக்கறிஞர் இரா.கோகுலக்கிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் வழக்குப்பதிவு செய்து புழல் சிறையிலடைக்கப்பட்டனர்.
சிறையிலடைக்கப்பட்டவர்கள் விவரம் பின்வருமாறு:
இரா.கோகுலக்கிருஷ்ணன், பி.பார்த்திபன் , இ.முருகன் , வி.ஞானபிரகாஷ், ச.ஜீவானந்தம், இரா.தீபன்குமார், இர. ஆரோக்கிய புதுமை ராஜ், மு.லட்சுமணன், அ.மகிமை சாமி, மு.பாலாஜி, வீ.அரவிந்தன், வே.இராஜா, ந.ராஜேஷ்குமார், ப.ஜெய்கணேஷ், வே.சதிஸ்குமார், கா.நெப்போலியன் மற்றும் ப.இரமேஷ்
37 பேரும் புழல் சிறையில் இருந்து இன்று 24-07-2018 காலை 10 மணியளவில் பிணையில் வெளிவந்தனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்ற தொடர் போராட்டத்தின் 100வது நாள் அன்று நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் பேரணியில் பங்கேற்றதைச் சான்றாக வைத்து, பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் தொடர்புள்ளதாகக் கூறி 7 பிரிவுகளின் கீழ் பொய் வழக்குகள் பதிந்து கடந்த மே மாதம் 30ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா நெல்லை அ.வியனரசு அவர்கள், இன்று 24-07-2018 பிற்பகல் 12 மணியளவில் பாளையங்கோட்டை மத்தியச் சிறையிலிருந்து பிணையில் வெளிவந்துள்ளார்.
ஒரே நாளில் 39 நாம்தமிழர்கள் விடுதலையானது குறித்து சீமான் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.


