துப்பாக்கிச்சூட்டில் நாம்தமிழர் பெண் வேட்பாளர் படுகாயம் – சீமான் கண்டனம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிசூடு நடத்தி கொலைவெறி தாக்குதலை அரங்கேற்றிக் கொண்டு இருக்கிறது.

இந்த துப்பாக்கிசூட்டில் இதுவரை ஒரு பெண் உட்பட 8பேர் உயிரிழந்து உள்ளனர்,

நாம் தமிழர் கட்சி சார்பாக தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட ஜூடிகேமா பாக்கியராசு அவர்களுக்கும் துப்பாக்கிசூட்டின் பலத்தகாயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல் துறை நடத்திய இந்த கொலைவெறி தாக்குதலை நாம் தமிழர் கட்சி கடுமையாக கண்டிக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response