இன்றுவரை பேருந்து செல்லாத குக்கிராமத்திலிருந்து ஒரு ஐஏஎஸ்

– யுவராஜ்

 

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற இந்திய ஆட்சிப் பணிகளுக்கான தேர்வை ஒவ்வொரு ஆண்டும் மத்தியப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தி வருகிறது. இது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று பிரிவுகளாக நடத்தப்படும்.

2017-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வுகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டன. ஏறக்குறைய 11 லட்சம் பேர் தேர்வுகளை எழுதினார்கள். மெயின் தேர்வுகள் அக்டோபர் 28 முதல் நவம்பர் 3-ம் தேதிவரை நடந்தன. 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நேர்முகத் தேர்வுகளும் நடந்தன. அனைத்து தேர்வுகளும் முடிந்த நிலையில், முடிவுகள் நேற்று யுபிஎஸ்சி இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் நேர்முகத் தேர்வு முடிந்து அகில இந்திய அளவில் மொத்தம் 990 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து 50 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் முதல் 100 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேரும் இடம் பிடித்துள்ளனர்.

ஐஏஎஸ் தேர்வில் இந்த தேர்வில் தர்மபுரியை சேர்ந்த கீர்த்திவாசன் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் அவருக்கு 27 வது இடம் கிடைத்துள்ளது. அரசியல் அறிவியலை விருப்ப பாடமாக எடுத்து பயின்ற கீர்த்திவாசன், தனது தேர்வு தேர்வில் வெற்றி பெற வாய்ப்பாக அமைந்தது என கூறியுள்ளார். திருச்சி என்ஐடியில் சிவில் இன்ஜினியரிங் படித்த இவர், அதன்பின் ஐஏஎஸ் தேர்வுக்கு படித்துள்ளார்.

மதுபாலன் தமிழக அளவில் 2-ம் இடமும் இந்திய அளவில் 71 வது இடமும் பிடித்துள்ளார். எலெட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷனில் பொறியியல் பட்டம் பெறற இவர் டிசிஎஸ்சில் வளாக தேர்வில் பணி கிடைத்தபோதும் அதில் சேராமல், யுபிஎஸ்சி தேர்வு எழுதியுள்ளார்.

தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக தேர்வு செய்து தேர்வு எழுதிய இவர், முதல் தடவையிலேயே தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

திருவண்ணாமலை மாணவர் யுவராஜ் BE (ECE), ஆல் இந்தியா ரேங்க் 751 எடுத்து ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவர், இன்றுவரை பேருந்து செல்லாத குக்கிராமத்திலிருந்து வந்து படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response