
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி பெங்களுரூ அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.
பெங்களூரு அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக தலைவர் கோலி மற்றும் குயின்டான் டி காக் களம் இறங்கினர். தொடக்கத்தில் இருந்தே இருவரும் ஆதிக்கம் செலுத்த துவங்கியதால், சென்னை அணியின் பந்து வீச்சாளா்களுக்கு கடும் சவால் ஏற்பட்டது. குறிப்பாக, குயின்டான் டி காக் சென்னை வீரா்கள் போடும் பந்துகளை பவுண்டரிகளுக்கு அனுப்பியவாறு இருக்க, ஷர்துல் தாகூர் பந்தில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து, கோலி 18 ரன்களில் (15 பந்துகள்) அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
கோலியை அடுத்து, அதிரடி மன்னன் டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். ஹர்பஜன்சிங் போட்ட ஒரு ஓவரில் 17 ரன்களை சோ்த்து ரசிகா்களை வியக்க வைத்தார் டிவில்லியர்ஸ். குயின் டி காக்கும், டி வில்லியர்சும் சென்னை அணியின் பந்துகளை நாலபுறமும் சிதறடித்த வண்ணம் இருந்தன. டி வில்லியர்ஸ் அடித்த பந்துகள் அநாயசமாக எல்லைக்கோட்டுக்கு பறந்தன.
சிறிது நேரத்தில் இருவரும் தங்களுடைய அரை சதத்தை பதிவு செய்து அணியை வலுப்பெறசெய்தனர். ஆல்ரவுண்டர் பிராவோ குயின்டான்டி காக்கை 53 (37 பந்துகள், 1 பவுண்டரி , 4 சிக்சா்) வீழ்த்தினார். அவரை தொடா்ந்து தன்னுடைய 25-வது அரை சதத்தை அடித்த விட்டு டிவில்லியர்ஸ்சும் 68 (30 பந்துகள்,2பவுண்டரி, 8சிக்சா்) நடையக்கட்டினா்.
பின்னா் வந்த கோரி ஆண்டர்சனும் சொற்ப ரன்களில் 2(8பந்துகள் ) இம்ரான் தாஹீா் சுழலில் சிக்கி அவரும் பெவிலியன் திரும்பினார். இந்த நிலையில் கிரான்ட்ஹோம் மற்றும் மன்தீப்சிங் கடைசி ஓவா்களை அதிரடியாகவும் அணியின் ரன்களை குறையாமலும் விளையாடி வந்தனா். ஆனால் 19 ஓவாின் கடைசி மன்தீப்சிங் கடைசி தூக்கி அடித்து அவுட்டாகினாா். இவரை அடுத்து வந்த கிரான்ட்ஹோனுமும் நேகியும் அடுத்தடுத்து ரன் அவுட்டாகினா். பின்னா் வந்த உமேஷ் யாதவும் கேட்ச் கொடுத்தாா். இதன் மூலம் அந்த ஓவாில் மட்டும் 3 விக்கெட்டுகளை எடுத்து சென்னை வீரர்கள் அமா்களப்படுத்தினர்.
பெங்களூரு அணி 20 ஓவா்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களைக் குவித்தது.
இதையடுத்து, 206 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பவான் நெகி வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் சென்னை அணியின் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் (7 ரன்கள்) பந்தை தூக்கி அடிக்க நினைத்து முகமத் சிராஜ்ஜிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடுவுடன் ஜோடி சேர்ந்தார். இதில் அம்பதி ராயுடுவின் அதிரடியால் சென்னை அணி 5 ஓவர்களில் 50 ரன்களை சேர்த்தது.
இந்நிலையில் சுரேஷ் ரெய்னா (11 ரன்கள்), உமேஷ் யாதவ் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷாம் பில்லிங்ஸ் (9 ரன்கள்), ரவீந்திர ஜடேஜா (3 ரன்கள்) ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.சென்னை அணி 8 ஓவர்கள் முடிவில் 74 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தோனி, அம்பதி ராயுடுவுடன் கை கோர்த்தார். இருவரும் இணைந்து பெங்களூரு அணியினரின் பந்து வீச்சை சிதறடித்தனர்.
அதிலும் தோனி தனக்கே உரிய பாணியில் எதிர்கொண்ட பந்துகளை எல்லைக்கோட்டை தாண்டி பறக்க விட்டார். குறிப்பாக 13-வது ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்கள் அடித்த தோனியின் ஆட்டத்தை கண்டு ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அதே ஓவரில் அம்பதி ராயுடு சிக்சர் அடித்து ஐபிஎல் போட்டியில் தனது 16வது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
கடைசி 5 ஓவர்களில் சென்னை அணி வெற்றி பெற 71 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இருவரும் மிகவும் அதிரடியாக விளையாடி பெங்களூரு ரசிகர்களுக்கு வானவேடிக்கை காட்டினர். 17.2 வது ஓவரில் தோனி, சிக்சருடன் தனது அரைசதத்தை பூர்த்தி செய்ய அதே ஓவரில் சிறப்பாக விளையாடி வந்த அம்பதி ராயுடு (82 ரன்கள், 3 பவுண்டரி, 8 சிக்சர்கள் ) ரன் அவுட்டாகி வெளியேறினார். கடைசி 6 பந்துகளில் 16 ரன்கள் தேவைபட்ட நிலையில், 2 பந்துகள் மீதமிருக்க சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன் மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
தலைவர் தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் (1 பவுண்டரி, 7 சிக்சர்கள்) எடுத்தார்.


