எஸ்.வி.சேகருக்கு விஷால் கடும்கண்டனம்

பத்திரிகையாளர்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்த எஸ்.வி.சேகருக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்புகள் வந்துகொண்டேயிருக்கின்றன.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக எஸ்.வி.சேகருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என விளங்கப்படும் ஊடகம் இன்று மக்களை ஒன்றிணைக்கிறது.

அப்படிப்பட்ட ஊடகத்துறையில் இன்றைய சூழலில் தைரியமாகவும், முற்போக்கு அணுகுமுறையோடும் பெண்கள் காணப்படுவது பெருமைக்குறியது, போற்றுதற்குரியது….

ஆனால் திரு.எஸ்.வி.சேகர் அவர்கள் தன்னுடைய முகநூல் பதிவில் ஊடகத்துறையில் பணிபுரியும் பெண்களை
இழிவு படுத்தும் ஒரு செய்தியைப் பதியவிட்டுருக்கிறார்.

பொதுவாக முகநூலில் நமக்கு வரும் கருத்துப் பதிவினை, நமக்கு உடன்பட்டால் மட்டுமே நாம் அதை மற்றவருக்கு அனுப்புவோம் . அந்த வகையில் திரு. எஸ்.வி.சேகர் அவர்கள் தனக்கு வந்த பதிவின் கருத்துக்கு உடன்பட்டே மறுபதிவு செய்து இருக்கிறார். அதில் உள்ள கருத்து பதிவிற்க்கு அவர் தார்மீகப் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கலைத்துறையால் சமூகத்தில் அறியப்பட்ட இவர் பொறுப்பற்ற முறையில் பெண்களை இழிவாகப் பதிவு செய்துள்ளார். இதை தென்னிந்திய நடிகர் சங்கம் கடுமையாகக் கண்டிக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அந்தக் குறிப்பில் நடிகர்சங்கத்தலைவர் நாசரும் செயலாளர் விஷாலும் கையெழுத்திட்டுள்ளனர்.

Leave a Response