சென்னை ஐபிஎல் போட்டியில் காலணி வீசியவர்கள் விடுதலை

10-04-2018 அன்று சென்னை, சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபில் போட்டியின் போது பார்வையாளராக சென்று விளையாட்டுத் திடலினுள் காலணிகள் வீசியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஐபிஎல் போட்டிகளைப் புறக்கணிக்குமாறு முழக்கங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்ததற்காக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் 08 பேருக்கு நேற்று (19-04-2018) பிணை கிடைத்துள்ளது.

1. பிரபாகரன் காமராஜ்
2. பொன்னுவேல்
3. மகேந்திரன்
4. ராஜ்குமார்
5. சுகுமார்
6. ஆல்பர்ட்
7. ஏகாம்பரம்
8. மார்டின்

மேலும் ஐபிஎல் போராட்டத்தில் பங்கேற்றதற்காகக் கைது செய்யப்பட்ட (14-04-2018) ஸ்டாலின் அவர்களுக்கும் நேற்று (19-04-2018) பிணை கிடைத்துள்ளது.

எஞ்சியவர்களைப் பிணையில் எடுக்க “நாம் தமிழர் – வழக்கறிஞர் பாசறை” அயராது பாடுபட்டுக்கொண்டிருக்கிறது.

பிணை கிடைத்துள்ள 09 பேரும் இன்று (20-04-2018) மாலை 04:30 மணியளவில் விடுதலையானார்கள்.

அன்னைக் காவிரிக்காகப் போராடி சிறைசென்றவர்களை வரவேற்க புழல் சிறைவாயிலில் திரளானோர் கூடியிருந்தனர்.

Leave a Response