எச்.ராஜா,எஸ்.வி.சேகர் செய்திகளை வெளியிடமாட்டோம் – காவேரி நியூஸ் பகிரங்க அறிவிப்பு

அண்மையில் பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா பெண்களை இழிவு படுத்தும் வகையில் கருத்துகளை வெளிப்படுத்தினார்.

அதனால் நாடெங்கும் அவருடைய கொடும்பாவி எரிப்பு உள்ளிட்டு பல்வேறு போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் பத்திரிகையாளர்களையும் குறிப்பாக பெண் பத்திரிகையாளர்களையும் பேஸ்புக் பக்கத்தில் மிக மிக அநாகரிகமான வார்த்தைகளால் ஒரு பதிவை பகிர்ந்து இருந்தார் நடிகர் எஸ்.வி.சேகர். இதற்கு கடும் கண்டனம் எழுந்த உடன் உடனடியாக நீக்கி விட்டார்.

ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் எஸ்.வி. சேகருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி வெளியிட்ட கருத்துக்காக எஸ்.வி சேகர் மன்னிப்பு கோரியுள்ளார். மன வருத்தம் ஏற்பட்டுள்ள பத்திரிகை சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.

காவல்துறையிடம் புகார், நீதிமன்றத்தில் வழக்கு, பொதுவெளிகளில் போராட்டம் என்று பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வந்ததும் அலறியடித்து மன்னிப்பு கேட்டுள்ளார் எஸ்.வி.சேகர்.

இக்காரணங்களால் இனிமேல் தங்களுடைய தொலைக்காட்சியில் எச்ரஜா,எஸ்.வி.சேகர் ஆகியோர் பற்றிய செய்திகளை வெளியிடமாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது.

இதற்கு பொதுவெளியில் பெரிய ஆதரவு கிடைத்திருக்கிறது.

Leave a Response