ஐபிஎல் -ராஜஸ்தானை துவம்சம் செய்தது சென்னை அணி

ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய (ஏப்ரல் 20) லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

புனேவில் நடந்த இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

எனவே பேட்டிங்கில் இறங்கிய சென்னை கிங்ஸ் அணி அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களை குவித்தது சென்னை அணி.

அணியின் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வாட்சன் 57 பந்துகளில் 106 ரன்களை குவித்தார். ரெய்னா 29 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

ஆனால் அந்த அணியால் சோபிக்கமுடியவில்லை. இறுதியில் ராஜஸ்தான் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களுக்கு சுருண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

இதுவரை 4 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 3 வெற்றிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

Leave a Response