திரும்பிப்போ மோடி – இலண்டன் தமிழர்கள் போராட்டம் அதிர்ந்த மோடி

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த 12-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வந்தபோதும் போராட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பிலும் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தப்பட்டது.

சமூக வலைதளங்களிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ‘கோ பேக் மோடி’ என்ற ஹேஷ்டேக் உலக அளவில் முதலிடம் பிடித்தது.

இந்நிலையில் பிரதமர் மோடி காமன்வெல்த் நாடுகள் மாநாட்டில் கலந்துக்கொள்ள பிரிட்டன் சென்று உள்ளார். பிரிட்டன் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் தயார் நிலையில் உள்ளது என்று தகவல்கள் வெளியாகியன.

இலண்டனில் பிரதமர் மோடிக்கு எதிராக ‘கோ பேக் மோடி’ என கோஷம் எழுப்பி தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

போராட்டத்துக்கு அங்குள்ள தமிழர்கள் பெருமளவில் வந்து கொண்டேயிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இதைச் சற்றும் எதிரபாராத மோடி அதிர்ச்சி அடைந்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

Leave a Response