ஐபிஎல் – டெல்லியை ஓட ஓட விரட்டியது கொல்கத்தா

11 வது ஐபிஎல் போட்டியின் 13 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

சிறப்பாக விளையாடிய நிதிஷ் ராணா தனது அரை சதத்தினை பூர்த்தி செய்து 59 ஓட்டங்கள் எடுத்தார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 200 ஓட்டங்களைக் குவித்தது.

201 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி விளையாடத் தொடங்கியது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி சார்பில் முதலில் களமிறங்கிய கேப்டன் கெளதம் காம்பீட் 8(7), ஜாசன் ராய் 1(3), சரியாக விளையாடாத நிலையில், அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் 4(3) விரைவாக ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரிசாப் பாண்ட் 43(26), கிளன் மேக்ஸ்வெல் 47(22) அதிரடியில் கலக்கிய போதும் குல்தீப் யாதவ் அவர்களின் விக்கெட்டை எடுத்து போட்டியின் போக்கைத் தலைகீழாக மாற்றினார்.

அடுத்து ஆட வந்த ராகுல் தேவாதியா 1(2), விஜய் சங்கர் 2(4), கிரிஸ் மோரிஸ் 2(3), முகமது சமி 7(6), ஷாபாஸ் நதீம் 0(0), டிரண்ட் போல்ட் 0(2) அடுத்தடுத்து ஆட்டமிழக்க டெல்லி டேர்டெவில்ஸ் அணி 129 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதன் முலம் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 71 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Leave a Response