ஐபிஎல் – ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோற்றது பெங்களூரு அணி

11-வது சீசன் ஐபில் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் பெங்களூரு சின்னச்சாமி அரங்கில் இன்று மாலை நடந்தது.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது.

218 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 6 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.

இதனால் சொந்த மண்ணிலேயே பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 2-வது தோல்வியைச் சந்தித்து 6-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

Leave a Response