காமன்வெல்த் போட்டிகள் நிறைவு -பதக்கப்பட்டியலில் இந்தியா 3 ஆவது இடம்

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் கடந்த 10 நாட்களாக நடந்துவந்த 21-வது காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு பெற்றன.

கடந்த 5-ம் தேதி தொடங்கிய இந்த விளையாட்டுப் போட்டியில், 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 256 வீரர்,வீராங்கனைகள் கொண்ட குழுவினர் பங்கேற்றனர்.

இன்று நிறைவுபெற்ற இந்தப்போட்டிகளில், 80 தங்கப்பதக்கம்,58 வெள்ளி, 59 வெண்கலம் உள்ளிட்ட 197 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 45 தங்கம்,45 வெள்ளி,46 வெண்கலம் உள்ளிட்ட 137 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2-ம் இடத்தையும் பிடித்தன.

26 தங்கப் பதக்கம் உள்பட ஒட்டுமொத்தமாக 66 பதக்கங்களை வென்று இந்தியா மூன்றாம் இடம் பிடித்தது.

கடைசி நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் 6 பதக்கங்களை வென்றனர். பாட்மிண்டன் பிரிவில் சாய்னா தங்கமும், பி.வி.சிந்து வெள்ளியும், கிடம்பி சிறீகாந்த் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

காமென்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் 2-வது சிறப்பான செயல்பாடு இதுவாகும்.

இதற்கு முன் கடந்த 2010ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமென்வெல்த் போட்டியில் 38 தங்கம் உள்பட 101 பதக்கங்களை இந்தியா வென்று இருந்தது.

Leave a Response