காங்கிரஸ் கட்டுத்தொகையை இழந்தது – ராகுல் மகிழ்ச்சி

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பூல்பூர், கோரக்பூர் மக்களவை தொகுதிகளிலும், பீகார் மாநிலம் அரேரியா மக்களவை தொகுதி மற்றும் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் பூல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வெற்றி பெற்றுள்ளது. கோரக்பூரிலும், அரேரியாவிலும் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் எம்பியாக இருந்த கோரக்பூரில் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு அக்கட்சியினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

‘‘இடைத்தேர்தலில் பாஜக அல்லாத வேட்பாளருக்கு மக்கள் பெருமளவு ஆதரவு அளித்துள்ளனர். வெற்றி பெற்றுள்ள வேட்பாளருக்கு எனது வாழ்த்துக்கள். தேர்தல் முடிவுகள் மூலம் பாஜக மீதான மக்களின் கோபம் வெளிப்பட்டுள்ளது. காங்கிரஸை பொறுத்தவரையில் உத்தரப் பிரதேசத்தில் கட்சியை வலிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனினும் இது ஒரே நாள் இரவில் நடந்து விடாது’’ எனக்கூறினார்.

இந்தத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வைப்புத்தொகையை இழந்தாலும் அதன் தலைவர் ராகுல்காந்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Leave a Response