உபி, பீகாரில் பாஜக படுதோல்வி – மோடி அதிர்ச்சி

உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் பாராளுமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில்
ஆளும் பா.ஜ.வுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது.

உ.பி முதல்வர் யோகி தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று வந்த கோரக்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

உ.பி.யில் முதல்வர் யோகி ஆதித்யநாத், உபி முதல்வராகத் தேர்வு செய்யப்பாட்டதும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். அதனால் கோராக்பூர் தொகுதிக்கும், துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா பதவி விலகியதால் புல்புர் தொகுதிக்கும், பீஹாரில் அரேரியா தொகுதி ஆகிய மூன்று பாராளுமன்ற தொகுதிகளுக்கும், பீகாரில் ஜகனாபாத், பஹாபூவா என இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 11ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

உ.பி.,யில் சமாஜ்வாதிக்கு, பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளித்தது.

இதில், கோரக்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன் குமார் 21 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். (இந்த தொகுதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றவர்).

துணை முதல்வர் கேசவ் மவுரியா ராஜினாமா செய்த புல்புர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் படேல் 59 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி டெபாசிட்டை இழந்தது.

பஹாபூவா சட்டசபை தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் ரிங்கி ராணி பாண்டே வெற்றி பெற்றுள்ளார்.

பீகார் மாநிலத்தில் அராரியா தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவு வெளியானது. இதில் ராஷ்டிய ஜனதாதள வேட்பாளர் 61988 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ராஷ்டிய ஜனதாதள கட்சி வேட்பாளர் 5,09,334 ஓட்டுகளும், பா.ஜ., வேட்பாளர் 4,47,346 ஓட்டுகள் பெற்றுள்ளனர்.

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் பாராளுமன்றத்தேர்தலுக்கு இம்முடிவுகள் முன்னோட்டமாக அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் சொல்கின்றனர்.

Leave a Response