பெரியார் சிலை நிழலைக்கூடத் தொடமுடியாது எச்சை – எச்.ராஜாவுக்கு எதிராகப் பொங்கிய குஷ்பு

திரிபுராவில் பெலோனியா கல்லூரி சதுக்கத்திலுள்ள, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் வைக்கப்பட்ட புரட்சியாளர் லெனின் சிலையை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு பாஜகவினர் அகற்றினர். இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இது குறித்து பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில், ”லெனின் யார் அவருக்கு இந்தியாவிற்கும் என்ன தொடர்பு கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில். இன்று திரிபூராவில் லெனின்சிலை நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை” என்று பதிவிட்டிருந்தார்.

எச்.ராஜாவின் இந்த பதிவுக்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன. மு.க.ஸ்டாலின்,வைகோ, திருமாவளவன், பொதுவுடைமைக் கட்சியினர் ஆகியோர் கடுமையாகப் பேசினர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குஷ்பு, ஒருபடி மேலே போய் எச்சை என்று ட்வீட் போட்டிருக்கிறார்.

எதிர்ப்புகளைக் கண்டவுடன் அந்தப் பதிவை எச்.ராஜா தற்போது நீக்கியுள்ளார்.

Leave a Response