தமிழர்களுக்குக் கொலைமிரட்டல் விடுத்த சிங்களன் இலண்டனில் இருந்து வெளியேற்றம்?

இலங்கை சுதந்திர தினம் பிப்ரவரி 4-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இலண்டனில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது அங்கு இலங்கை அரசுக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்திக் கொண்டு கூடியிருந்த ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2009 ஆம் ஆண்டில் இலங்கை உள்நாட்டுப் போரில் நடந்த இன அழிப்பு குறித்தும் தற்போது தமிழர்களின் பகுதியில் உள்ள இலங்கையின் ரகசிய ராணுவ முகாம்களுக்கும் கண்டனம் தெரிவித்து குரல்கள் எழும்பின.

அப்போது இலங்கை தூதரக அதிகாரிகளுடன் நின்று கொண்டிருந்த இலங்கை இராணுவ அதிகாரி ஒருவர் இலங்கை தமிழர்களை நோக்கி கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் சைகை விடுத்திருக்கிறார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இலங்கை ராணுவ அதிகாரியின் இந்த செய்கைக்கு பல தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

காணொலி இணைப்பு: https://www.youtube.com/watch?v=NSyMO3gZ3rs

இக்காணொலி வேகமாகப் பரவியதால், தமிழ்மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்த சிங்கள அதிகாரியை,நாட்டை விடு வெளியேற்ற வேண்டும் என்று இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். அதையேற்று அவ்வதிகாரி விரைவில் வெளியேற்றப்படுவார் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response