மேடையிலேயே தனது பெருந்தன்மையை வெளிப்படுத்திய விஜய்சேதுபதி..!


சமீபத்தில் சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடந்தது. இதில் சிறந்த படமாக விதார்த் நடித்த ‘ஒரு கிடாயின் கருணை மனு’ தேர்வானது. அதோடு விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா படமும் 2வது சிறந்த படமாக தேர்வானது. அதே போல் மாநகரம் படத்திற்கு சிறப்பு ஜூரி விருது கிடைத்தது.

இந்த விழாவில் விஜய் சேதுபதிக்கு, ‘அமிதாப்பச்சன் யூத் ஐக்கான்’ விருது வழங்கப்பட்டது. அதோடு அவருக்கு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை கொடுக்கப்பட்டது. அந்த தொகையை கொடுத்த அடுத்த கணமே ‘இந்தோ சினி அப்ரிஷியேசன்ஸ்’ அமைப்புக்கே நன்கொடையாக கொடுத்து விட்டார்.

Leave a Response