இயக்குனர் பாலாஜி தற்கொலைக்கு விஜய், பாலிமர், ஜீ,மக்கள் ஆகிய தொலைக்காட்சிகள் காரணமா?

இந்தித் திணிப்பு சமக்கிருத திணிப்புப் பற்றி பேசுகிறோம் . சின்னத்திரையில் வேரூன்றியுள்ள கலாச்சார திணிப்பால் ஒரு உயிர் பலியாகி விட்டது !
சின்னத்திரையின் முன்னணி இயக்குநர் பாலாஜியின் தற்கொலை பல கேள்விகளை எழுப்பியுள்ளது !
திரைப்படங்களில் டப்பிங் படங்கள் வெளியீட்டிற்கு என்று ஒரு வரைமுறை உள்ளது . அத்தகைய வரைமுறை சின்னத்திரைக்கு இல்லையா ?
எந்தத் தொலைக்காட்சியை திறந்தாலும் முக்காடு போட்ட சேட்டம்மாவும் , மீசையில்லாத சேட்டு மாமாவும் தமிழில் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள் !
இந்தி இந்தியா இந்து மதம் என்கிற ரீதியில் பிற்போக்குத் தனமான கருத்துகள் அதில் நிரம்பி வழிகின்றன !
டப்பிங் தொடர்களுக்கு முதலில் வித்திட்டது அரசு தொலைக்காட்சி . ஜுனூன் பல வருடங்கள் ஓடிய நெடுந் தொடர் . பெண்கள் புகைப்பிடிப்பது , மது அருந்துவது , பல ஆண்களுடன் வாழ்வது என்ற ரீதியில் ஒரு இந்திய குடும்பத்தின் கதை சென்றதால் அதற்கு அப்போதே பலத்த எதிர்ப்பு நிலவியது !
அதன் பிறகு மகாபாரதம் ராமாயணம் என டப்பிங் சீரியல் கொடி பறந்தது . இப்போதும் விஜய் தொலைக்காட்சி மூலம் பறக்கிறது !
ஒரே வீட்டில் மூன்று பொண்டாட்களோடு வாழ்வது தான் டப்பிங் இந்தி தொடர்களின் மகத்துவம் !
தற்போது நிலவும் டப்பிங் பிரச்சனைக்கு முழு முதல் காரணம் விஜய் தொலைக்காட்சி . அதைத்தொடர்ந்து பாலிமர் , ஜீ தமிழ் , ராஜ், ஏன் மக்கள் தொலைக்காட்சியும் அதற்கு பலி !
சன் மட்டுமே இன்னும் நம்மூர் மாமியா மருமகள் சண்டையை எடுத்து வருகிறது !
லீவர் லிமிடெட் என்பது ஒரு பன்னாட்டு பகாசுர நிறுவனம் . பெண்களின் அழகு சாதனங்கள் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள்வரை இந்த நிறுவனம் தான் உலகையே ஆட்டிப்படைக்கிறது ! இந்தியாவில் இந்நிறுவனத்தின் பெயர் இந்தியா லீலர் அல்ல இந்துஸ்தான் லீவர் லிமிடெட் ! புரிந்துக்கொள்ளுங்கள் அரசியலை !
அந்தந்த நாட்டுப் பெயரை தன் பெயருடன் இணைத்து வியாபாரம் செய்யும் இன்நிறுவனத்தின் ஆதரவு இல்லாமல் எந்த கொம்பனாலும் தொலைக்காட்சி நடத்த முடியாது !
இன்று இந்தி மயமான டப்பிங் தொடர்களின் பின்னணியில் இருப்பது இந்த நிறுவனம் !
பல லட்சம் செலவு செய்து தமிழ்த் தொடர்களை தயாரித்து அதற்கு ஸ்பான்சர் பிடிப்பதை விட இந்தித் தொடர்களை டப்பிங் செய்து வெளியிடுவதே தொலைக்காட்சிகளுக்கு லாபம் தரும் !
இப்படி வெறும் வர்த்தகத்தை மட்டுமே பார்த்ததன் விளைவு இன்று தமிழ் சின்னத்திரை நடிகர்கள் இயக்குநர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் நடுத்தெருவுக்கு வந்து விட்டனர் !!
பாலாஜி தற்கொலையை வெறும் ஒரு சின்னத்திரை பிரச்சனையாக பார்த்தால் ..இது போன்ற தற்கொலைகள் தொடரும் !
இது தற்கொலை மட்டுமல்ல …பண்பாட்டுப் படுகொலை !
வெறும் கல்வியில் புகும் மொழித்திணிப்பை எதிர்த்தால் மட்டும் போதாது …ஒவ்வொரு வீட்டையும் ஆட்சி செய்யும் தொலைக்காட்சிகளில் நிலவும் டப்பிங் கலாச்சாரத்தை ஒழிக்காமல் விட்டால் நம் சந்ததியினர் ஒரு சேட்டுக் குடும்பமாக மாறுவதை யாராலும் தடுக்க இயலாது .– தாகம்செங்குட்டுவன்.

Leave a Response