திருமணத்திற்கு நடிகைகள் சினிமாவுக்கு முழுக்குப்போட்டு விடுவதுதான் வாடிக்கை. ஆனால் சமந்தாவோ தனது நடிப்பு தொழிலை கைவிடுவதாக இல்லை. அந்தவகையில் திருமணத்திற்கு முன்பே ஒப்புக்கொண்ட விஷால், சிவகார்த்திகேயன் படங்களுடன் தற்போது புதிய படம் ஒன்றிலும் நடிக்க ஒப்ந்தமாகி உள்ளார்.
கன்னடத்தில் பவண்குமார் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளியான ‘யு-டர்ன்’ படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ் ரீமேக்கில் தான் சமந்தா நடிக்க இருக்கிறாராம் ‘யு-டர்ன்’ இயக்குநர் பவண்குமாரே தமிழ் ரீமேக்கையும் இயக்கவுள்ளார். சமந்தா நாயகியாக நடிக்க, தயாரிப்பாளர் பவன் தயாரிக்கவுள்ளார். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.