சிவகார்த்திகேயன் படத்தில் சமந்தாவின் புதிய தோற்றம்..!


திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா அந்தவகையில், தமிழில் விஷாலுடன் ‘இரும்புத்திரை’ என்ற படத்திலும், நடித்து வரும் சமந்தா, பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு குற்றாலம், தென்காசி பகுதியில் நடைபெற்று வருகிறது இந்தப்படத்தில் பாவாடை, தாவணியணிந்து புதிய தோற்றத்தில் சமந்தா இருக்கும் புகைப்படத்தை இயக்குநர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Response