ஒகேனக்கலில் மீன்கள் கிடைப்பது அரிதாகி விட்டது

கொங்குநாடு ஜனநாயகக் கட்சியின் தர்மபுரி மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்(03.11.14) நடைபெற்றது.தர்மபுரி மாவட்ட அமைப்பாளர் சுதாகர் தலைமை தாங்கினார்.பென்னாகரம் ஒன்றிய செயலாளர் முத்துமாது முன்னிலை வகித்தார்.மாநிலத் தலைவர் G.K.நாகராஜ் சிறப்பு அழைப்பாளராக  கலந்துகொண்டார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

* தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிப்பகுதி சிறந்த சுற்றுலாத்தலமாகவும்,ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிப்பகுதியில் பிடிக்கப்படும் மீன்களுக்கு நல்ல சுவையுள்ளதால் அதை விரும்பி சாப்பிடவும்,எண்ணெய் குளியல் செய்யவும் தொடர்ந்து சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.ஆனால் தற்போது மீன்கள் கிடைப்பது மிகவும் அரிதாகி விட்டது.ஒரு நாளைக்கு 200 கிலோ வரை மீன்கள் பிடிக்கப்பட்ட காலம் மாறி இப்போது 5கிலோ வரை மட்டுமே நாள் ஒன்றுக்கு மீன்கள் பிடிக்கப்பட்டு வருகின்றன.மீன்கள் பற்றாக்குறையினால் தற்போது ஆந்திரா மீன்பண்ணைகளிலிருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.கடந்த தீபாவளி சமயத்தில் ஒருமாத காலத்தில் 20 டன்னுக்கு மேற்பட்ட ஆந்திர மீன்கள் ஒகேனக்கல் பகுதியில் விற்பனை செய்யப்பட்டன.இதனால் மீன்பிடித்தொழில் செய்வோரின் குடும்பங்களைச் சேர்ந்த 3000-த்திற்கும் மேற்பட்டோர் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர்.மேலும் ஆந்திரமாநில மீன்களின் சுவை குறைவாக இருப்பதால் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.எனவே நீர்வளம்மிக்க ஒகேனக்கல் பகுதியில் மீன்வளத்தைப்பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் மழைக்காலங்களில் கிடைக்கும் உபரிநீரைக்கொண்டு அந்த மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குளம் குட்டைகளை நிரப்ப வேண்டும்.விவசாயிகளின் நலனை முன்னிட்டு பாரூர் ஏரியில் இருந்து போச்சம்பள்ளி,மத்தூர்,கல்லாவி,ஊத்தங்கரை,அனுமன்தீர்த்தம் மற்றும் தென்பன்னை ஆறு வரையிலான ஏரிகளை ஒன்றிணைத்து புதிய கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சென்னாக்கல் என்ற இடத்தில் அணைகட்டி கிருஷ்ணகிரி,தர்மபுரி,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

கொங்குநாடு ஜனநாயக கட்சி சார்பாக நவம்பர் 18-ல் நடைபெறும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும்,நீராதாரத் திட்டங்களை மேம்படுத்தவும் நடைபெறும் பட்டினிப்போராட்டத்தில் தர்மபுரி மாவட்டத்திலிருந்து பெருந்திரளாக கலந்துகொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கட்சியின் நிர்வாக வசதிக்காக தர்மபுரிமாவட்டத்தை இரண்டாகப்பிரித்துஅரூர்,மொரப்பூர், பாப்பிரெட்டிபட்டி,காரிமங்கலம் ஆகிய ஒன்றியங்கள் அடங்கிய பகுதி தர்மபுரி கிழக்கு மாவட்டமாக பிரிக்கப்பட்டது.

பென்னாகரம்,பாலக்கோடு,நல்லாம்பள்ளி,தர்மபுரி ஆகிய ஒன்றியங்கள் அடங்கிய பகுதி தர்மபுரி மேற்கு மாவட்டமாக பிரிக்கப்பட்டது.

தர்மபுரி கிழக்கு மாவட்டத்திற்கு சுதாகர் மாவட்ட அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.

தர்மபுரி மேற்கு மாவட்டத்திற்கு முத்துமாது மாவட்ட அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.

பென்னாகரம் ஒன்றிய செயலாளராக முத்துசாமி நியமனம் செய்யப்பட்டார்.

பென்னாகரம் ஒன்றிய இளையஞரணி செயலாளராக குமார் நியமனம் செய்யப்பட்டார்.

பென்னாகரம் ஒன்றிய தலைவராக பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள்:

அரூர் ரவி,முருகன்,பச்சைதுரை,பென்னாகரம் வஜ்ரம்,அரூர் தமிழரசன்,அரூர் ஒன்றிய அமைப்பாளர் வேலு,சிலம்பரசன்,பாலக்கோடு ரவி,அரூர் மேற்கு ஒன்றியசெயலாளர் தோட்டா தமிழரசன்,கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமமூர்த்தி உட்பட பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.

Leave a Response