விஜய்-முருகதாஸ் படத்தை உறுதி செய்த சன் பிக்சர்ஸ்..!


‘அகிரா’, ‘ஸ்பைடர்’ தோல்வியால் அடுத்தப்படம் ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற முடிவில் இருந்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த நிலையில் ‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளாக செய்தி வெளியானது..

விஜய்க்கு ‘கத்தி’, ‘துப்பாக்கி’ என ஹிட் படங்களை கொடுத்ததால் விஜய் ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்தநிலையில் இந்தப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு முன் விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Response