விஷாலின் வேட்பு மனு நிராகரிப்பு..!


ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார் நடிகர் விஷால். அதற்காக அவர் வேட்பு மனு தாக்கல் செய்தபோது அந்த தொகுதியை சேர்ந்த சுமதி, பாண்டியன் என்கிற இருவர் அவரது வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்கள்.

ஆனால் அவர்களை ஆளும் கட்சியை சேர்ந்த ஆட்கள் மிரட்டியுள்ளார்கள்.. அதை தொடர்ந்து அந்த கையெழுத்தை தான் போடவில்லை, விஷால் போலியாக கையெழுத்து போட்டுள்ளார் என எழுதிக்கொடுத்துள்ளார்கள்.. இதுகுறித்து விஷாலுக்கும் வேலு என்பவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த இருவரின் கடிதத்தை காரணம் காட்டி விஷாலின் வேட்பு மனுவை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

Leave a Response