சந்தானத்திற்காக ஒன்றிணையும் சிம்பு-தனுஷ்..!


விஜய்-அஜித் போல சிம்பு, தனுஷ் இருவரும் எப்போதும் அவர்களது ரசிகர்களால் போட்டி நடிகர்களாவே பார்க்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இருவரும் போட்டியாளர்கள் அல்ல, சிறந்த நண்பர்கள் தான் என்பதை நிரூபிக்கும் வண்ணம், நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்திற்காக ஒன்றாக இணைய உள்ளனர்.

இதுகுறித்த தகவலை சந்தானமே நேரடியாக வீடியோவாக தெரிவித்துள்ளார். அதில், ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் ஆடியோ வெளியீடு டிசம்பர் 6ம் தேதி நடக்க உள்ளது. இதன் நாயகன் இப்படத்தின் இசையமைப்பாளர் சிலம்பரசன் தான். சிம்புவே, இந்த படத்தின் ஆடியோவை நடிகர் தனுஷ் ரீலீஸ் செய்வார் என அறிவிக்குமாறு என்னிடம் கூறினார்.” என சந்தானம் தெரிவித்துள்ளார்.

சந்தானத்தை சினிமாவில் அறிமுகம் செய்து வளர்த்துவிட்டவர் சிம்புதான் என்றாலும், சந்தானத்தின் ஆரம்பகாலத்தில் சில படங்களில் தனுஷுடனும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response