சத்யராஜ் சொல்லும் திட்டம் நடைமுறையில் சாத்தியமா..?


சினிமாவில் மட்டுமே புரட்சி செய்பவர்களுக்கு மத்தியில் நிஜத்திலும் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றும் நடிகர் சத்யராஜ், ஜாதியையும், சமூகத்தில் நடந்துவரும் பல அவலங்களை குறித்தும் குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுக்காக குரல் கொடுத்துள்ளார் சத்யராஜ்

இதுபற்றி அவர் கூறுகையில், இன்னும் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவல நிலை இருந்து வருகிறது. நாம், மோஷன் பரிசோதனைக்காக மலத்தை எடுப்பதற்கே தயங்குகிறோம் அல்லவா. ஆனால், இதை ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இன்னும் அப்படியே அள்ளிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்கு இன்னும் கருவி கூட கண்டுபிடிக்கவில்லை.

இதற்கு உடனடி தீர்வு எது என்றால், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு ஜாதியினரும் கழிவு தொட்டியில் இறங்க வேண்டும் என்று ஒரு அவரச சட்டம் போட்டால் போதும். உடனே மனித கழிவுகளை அள்ளுவதற்கு தனியாக கருவி ஒன்று கண்டுபிடித்துவிடுவார்கள். என்று அதிரடி திட்டம் ஒன்றை கூறினார் சத்யராஜ்.. சத்யராஜ் சொல்லும் திட்டம் நடைமுறையில் சாத்தியமா..?

Leave a Response