
கடந்த வருடம் வெளியான ‘துருவங்கள் பதினாறு’ படத்தில் புதுமையான திரைக்கதை மூலம் வித்தியாசமான படம் ஒன்றை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன். தற்போது இவரது இயக்கத்தில் நடிகர் அரவிந்த்சாமி ஹீரோவாக நடித்து வரும் படம் ‘நரகாசூரன்’.
இந்தப்படத்தில் அரவிந்த்சாமியுடன், இந்திரஜித் சுகுமாறன், சுந்தீப் கிஷண், ஸ்ரேயா சரண், ஆத்மிகா ஆகியோர் நடிக்கின்றனர். படத்திற்கு ரோன் யேதன் யோகன் இசையமைத்து வருகிறார் இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல், ஊட்டியில் நடந்து முடிந்துள்ளது. இந்திரஜித் சுகுமாறன், சுந்தீப் கிஷண், ஆத்மிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு எடுக்கப்பட்டுள்ளன.
விரைவில், அடுத்த ஷெட்யூல் தொடங்க உள்ளது. இந்நிலையில், படத்தை பிப்ரவரி மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்தப் படத்தை, இயக்குனர் கார்த்திக் நரேனுடன் இணைந்து இயக்குனர் கௌதம் மேனனும் தயாரிக்கிறார்.


