தீபாவளிக்கும் பொங்கலுக்கும் நடுவில் வெளியாகும் விக்ரமின் ‘ஸ்கெட்ச்’..!


தற்போது விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஸ்கெட்ச்‘. தமன்னா, ஸ்ரீப்ரியங்கா இருவரும் கதாநாயகிகளாக நடிக்க ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் இதில் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளி அன்று டீஸர் வெளியீடு, அதனைத் தொடர்ந்து இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு ஆகியவற்றின் மூலம் படத்தை விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. தற்போது இப்படத்தை கிறிஸ்துமஸ் தின விடுமுறைக்கு வெளியிட முடிவு செய்திருக்கின்றனர் படக்குழுவினர்.

Leave a Response