கமல்,ரஜினி,விஷாலுக்கு சீமான் அறிவுரை


28% GST வரியால் திரையரங்கு கட்டணம் ஏற்கெனவே உயர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழக அரசு 10 விழுக்காடு வரி போட்டுள்ளதோடு, திரையரங்குகள் 25 விழுக்காடு கட்டணம் உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு வரியை முற்றிலும் நீக்க வேண்டும் என்று கூறி திரையரங்கங்கள் மூடப்போவதாகச் சொல்கின்றனர். இது குறித்து சீமான் கூறியிருப்பதாவது…

பெரிய நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் விசால் போன்றவர்கள் திரண்டு சென்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பிரதமர் மோடி ஆகியோரைச் சந்தித்து திரையரங்கு கட்டணத்தில் 28% GST வரியை குறைக்கக்கோரி கடிதம் கொடுக்கவேண்டும். அதை விட்டுவிட்டு ஏற்கனவே இருந்த மாநிலத்தின் கேளிக்கை வரியை முழவதுமாக நீக்கக்கோருவது ஏற்புடையதல்ல!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response