தெலுங்கில் ரீமேக்காகும் குரங்கு பொம்மை..!


இயக்குனர் நிதிலன் இயக்கத்தில் விதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ், பி.எல்.தேனப்பன், குமரவேல் ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘குரங்கு பொம்மை’. இந்தப் படம் கடந்த 1ம் தேதி வெளிவந்தது. சாதாரண மக்களின் வாழ்க்கையில் பணம் எப்படிப்பட்ட அசாதாரண முடிவுகளை எடுக்க வைக்கிறது என்பதை ஒரு க்ரைம் திரில்லரில் சொல்லப்பட்ட படம். படத்தில் விதார்த்தின் தந்தையாக பாரதிராஜா நடித்துள்ளார். இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் ‘குரங்கு பொம்மை’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய எஸ் போக்கஸ் என்ற நிறுவனம் இதற்கான உரிமத்தை வாங்கியுள்ளது. இந்தப் படத்தைப் பற்றி எஸ்.போக்கஸ் நிறுவன உரிமையாளர் எம்.சரவணன் கூறுகையில், ‘‘குரங்கு பொம்மை படம் ஒரு அற்புத படைப்பு. நல்ல படங்களுக்கு மொழி எல்லைகளே கிடையாது. தெலுங்கு சினிமா ரசிகர்களும் தெலுங்கு சினிமா வணிகமும் இப்படத்திற்கு பெரும் ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

Leave a Response