
‘பாகுபலி2’. இந்தப் படத்தின் வெற்றிக்குப்பின் தனது அடுத்த படத்தை அறிவிக்காமல் மவுனம் காத்து வந்தார் இயக்குனர் ராஜமவுலி இந்நிலையில் ராஜமவுலி அடுத்து இயக்கும் படத்தில் மகேஷ்பாபு நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் மகேஷ்பாபுவே உறுதிப்படுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
‘ஸ்பைடர்’ படத்தை தொடர்ந்து மகேஷ் பாபு, கொரட்டலா சிவா இயக்கத்தில் ‘பாரத் அனே நானு’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் தான் தற்போது மகேஷ்பாபு பிஸியாக இருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்திலும் மகேஷ் பாபு ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்த ஆண்டு இறுதியில் ராஜமவுலி இயக்கும் ஒரு படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார் நடிகர் மகேஷ் பாபு.


