பிக்பாஸ் வீட்டு அனுபவம் எப்படி? – பகிர்ந்து கொள்ளும் அஞ்சலி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலி பங்கேற்றார். அவர் போட்டியாளராகப் பங்கேற்கவில்லை. சிறப்பு விருந்தாளியாக பிக்பாஸ் வீட்டுக்குள் அஞ்சலி சென்றுவந்தார்.

‘பலூன்’ படத்தின் விளம்பரத்திற்காகவே அஞ்சலி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா பேசிய ‘ஷட் அப் பண்ணுங்க’ என்ற வார்த்தை மிகவும் பிரபலம். அந்த வார்த்தையை வைத்து ‘பலூன்’ படக்குழு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் இணையத்தில் அப்பாடல் வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்தே,’பலூன்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வாக இயக்குநர் சினீஷ் மற்றும் அஞ்சலி இருவரும் ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் சென்று வந்தார்கள். அங்கு ‘ஷட் அப் பண்ணுங்க’ என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டு, பிக் பாஸ் போட்டியாளர்களோடு அஞ்சலியும் நடனமாடினார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அஞ்சலி. அதைத்தொடர்ந்து ஓவியா ரசிகர்கள் அஞ்சலியோடு உரையாடத்தொடங்கினார்கள்.

ஓவியாவோடு ‘கலகலப்பு’ படத்தில் இணைந்து நடித்துள்ளீர்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போய்விட்டு வந்தவுடன் ஓவியாவைப் பற்றி நீங்கள் கூறுவது என்ன?” என்று அஞ்சலியின் ட்விட்டர் கணக்கில் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு “ஓவியா மிகவும் உண்மையானவர். நல்ல நண்பர்” என்று பதிலளித்திருக்கிறார் அஞ்சலி.

தொடர்ந்தும் நிறைய கேள்விகள் வந்துகொண்டிருக்கின்றன. ஒருசிலவற்றிற்கு அஞ்சலி பதிலளிக்கிறார்.

Leave a Response