மாற்றுத்திறனாளிகளிடம் மன்னிப்பு கேட்ட சுப.உதயகுமாரன்

சில நாட்களுக்கு முன் பச்சைத் தமிழகம் தலைவர் டாக்டர். சுப. உதயகுமார் தனது முகநூல் பதிவில் நொண்டிச்சாக்கு என்று பதிவிட்டு இருந்தார். சில மாற்றுத் திறனாளி நண்பர்கள் என்னிடம் வருத்தப்பட்டு இருந்தனர். இது குறித்து அண்ணன் சுப. உதயகுமார் அவர்களின் பார்வைக்குக் கொண்டு சென்றேன்.

அவரின் பதில் வரிகள் இதோ…

ஓ, அப்படியா. தம்பி நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று சொல்லுங்கள். அந்த வார்த்தை மாற்றுத்திறனாளி தோழர்களின் மனதைப் புண்படுத்தும் என்று நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. இப்போதுதான் புரிகிறது. இனிமேல் அந்த வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதி ஏற்கிறேன்.

வேண்டும் என்றே இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவர் அந்த வார்த்தையை எழுதவில்லை. எதிர்பாராத விதமாக நடந்து விட்டது. பச்சைத் தமிழகம் எப்போதும் மாற்றுத்திறனாளிகள் இல்லை இந்த சமூகத்தை மாற்ற வந்த திறனாளிகள் பக்கம் நிற்கும்.

அருள் , செய்தித் தொடர்பாளர்
பச்சைத்தமிழகம்.

Leave a Response