எடப்பாடியைக் கடுமையாகச் சாட தந்தைபெரியாரைப் பயன்படுத்திய தினகரன்

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி எடப்பாடி அரசுக்கு நெருக்கடி முற்றிய நிலையில், டி.டி.வி. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சட்டப்பேரவை சபாநாயகர் ப. தனபால் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சபாநாயகரின் இந்நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சட்டப்பேரவையில் கொறடா உத்தரவை மீறினால் மட்டுமே தகுதி நீக்க உத்தரவு செல்லும்.

ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சபாநாயகரை ஆட்சியாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.

கட்சித்தாவல் நடவடிக்கை என்றால், 18 பேர் எந்தக் கட்சிக்குத் தாவினர்?

தேர்தல் ஆணையத்தில் வழக்கு உள்ள நிலையில், 18 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ஏன்?

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் சென்றால், நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது

இப்படிப் பல்வேறு விதமான கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், இதுபற்றிக் கருத்துக்கூறும் வகையில் தந்தைபெரியாரின் பேச்சை மேற்கோள் காட்டியிருக்கிறார் தினகரன்.

அவர், தன்னுடைய ட்விட்டரில்,

பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப்பற்றோ நாட்டுப்பற்றோ சிறிதளவும் காணமுடியாது

என்று 3.5.65 தேதியிட்டு விடுதலை நாளேட்டில் வெளிவந்துள்ள பெரியார் பேச்சை வெளியிட்டிருக்கிறார்.

Leave a Response