தமிழக அரசின் நிவாரண உதவியைப் பெறுவது தங்கையை இழிவுபடுத்தும் – அனிதா அண்ணன் திட்டவட்டம்

தகுதியிருந்தும் நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு ரூ.7 இலட்சம் நிவாரண நிதியும், அவரது குடும்பத்தில் படித்த ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

ஆனால், தமிழக அரசின் நிவாரண உதவியை அனிதா குடும்பத்தினர் நிராகரித்துவிட்டனர். இதுகுறித்து, அனிதா குடும்பத்தினரிடம் அரியலூர் ஆட்சியர் லட்சுமிபிரியா நேற்று பேச்சு நடத்தினார். அரசு நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி அனிதாவின் அண்ணன் மணிரத்னம் பத்திரிகையாளர்களிடம், அரசு வழங்கும் நிதியை தற்போது பெறுவது, எனது தங்கையின் மரணத்தை இழிவுபடுத்தும் செயலாகும். நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அனிதா குடும்பத்தினரின் இம்முடிவு வெகுமக்களிடையே வரவேற்புப் பெற்றுள்ளது.

Leave a Response