நதிகளை மீட்போம் என்று சொல்லி இளைய தலைமுறையை ஏமாற்றும் ஜக்கி வாசுதேவன்.
சாலையோர பிச்சைக்காரர்களுக்குப் போர்வை கொடுப்பவர், சீமைக்கருவேலே மரங்களை ஒழிப்போம், பிளாஸ்டிக் ஒழிப்போம் என்று சொல்பவர்கள், மரம் நடுவோம், மழை நீர் சேகரிப்போம் என்று சொல்கின்ற எல்லோரையும் வாட்ஸ் அப்பிலும், முகநூல்களிலும் நம்முடைய இளிச்சவாய் மக்கள் அளவில்லாமல் புகழ்ந்து பேசுவதைப் பார்த்துவிட்டு, பல சமூகவிரோதிகளும் இப்போது நதிகளை மீட்போம், நதிகளைக் காப்போம் என்று வியாபாரத்துக்கான களத்தில் இறங்கியுள்ளனர்.
தற்போது கோவையில் செயல்பட்டுவரும் ஈசா அமைப்பின் தலைவரான ஜக்கிவாசுதேவன் என்ற ஒரு மோசடிப் பேர்வழி, “நதிகளை மீட்போம்” என்ற கோரிக்கையுடன் மிஸ்டு கால் கொடுங்கள் என்ற ஒரு அமைப்பை துவக்கியுயுள்ளான்.
இவர் ஒரு சமூக அக்கறையுள்ள ஆளல்ல… சட்ட விரோதமாக மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளை ஆக்கிரமித்து பல நூறு ஏக்கரில் கட்டடம் கட்டியுள்ளான்.
இதனால், காலம் காலமாக ஒரு வழியில் நடந்து வந்த பல விலங்குகள் மற்றும் யானைகள் வழித்தடம் தடைபட்டுள்ளது. இப்பகுதியில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் பல பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். சுற்றுச்சூழல் பதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள பல பணக்காரப் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு யோகா என்ற பெயரிலும், சமூக சேவை என்ற பெயரிலும், படித்த இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பலருக்குப் போதை மருந்தைக் கொடுத்து, அடிமையாக்கி அவர்களைத் தன்னுடைய மடத்தில் அடைத்து வைத்துள்ளவன்.
இப்படிப் பல வகையிலும், மக்களை ஏமாற்றிவாழும் இந்த ஆள் “நதியை மீட்போம்” என்று தனது முட்டாள் சீடர்கள் மூலமும், சில பணத்துக்காக எதையும் விட்டுக்கொடுக்கும் நான்காம் தர தரகர் மூலமும், தெருவுக்குத் தெரு விளம்பரத் தட்டிகளை வைத்து ஒரு எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள் என்று சொல்லிவருகிறான்.
எந்த நதி முடக்கப்பட்டுள்ளது, அதை யாரிடமிருந்து மீட்கப் போகிறான். எந்த நதியை யார் அபகரித்து வைத்துள்ளனர் என்ற எந்த விபரமும் இல்லாமல் “நதியை மீட்போம்” என்று மொட்டையாகப் போட்டு, சமூக ஆர்வமும், அக்கறையும் உள்ள அப்பாவி மக்களைத் திரட்டி தன்னுடைய ஈசா மையத்தின் அங்கத்தினராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளான்.
உண்மையிலேயே இவனுக்கு தமிழக மக்கள் மீது அக்கறையிருந்தால், கேரளா அரசால் முடக்கப்படும் பவானி ஆறு, முல்லை பெரியாறு, கர்நாடக அரசால் முடக்கப்படும் காவேரியை, ஆந்திர அரசால் சுரண்டப்படும் பாலாற்றை மீட்போம் என்று அந்த விளம்பரத்தில் போட்டிருக்கவேண்டும்.
இவன் கேரளா, ஆந்திரா, கர்நாடக அரசுகளால் ஆக்கிரமிக்கப்படும் ஆறுகளை மீட்கப் புறப்படவில்லை… இளகிய மனமும், பாரம்பரியம் பண்பாடு காப்பற்றப்படவேண்டும், இயற்கை அழியக்கூடாது, மழை நீர் சேமிக்கவேண்டும், நதிகள், குளங்கள் சீரமைக்கப்படவேண்டும் என்று சமூக அக்கறையுடன் பாடுபடும் நம் தமிழ் இளைய தலைமுறையினரை குறிப்பாக இளம் பெண்களைக் குறிவைத்தே இந்த நதிகளை மீட்போம் என்ற முழக்கத்தை முன்வைத்துக் களம் இறங்கியுள்ளான்.
உங்கள் எண்ணிலிருந்து ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும், உங்கள் சரித்திரத்தையே எடுத்துவிடுவார்கள். அதில், தங்களுக்குப் பயனுள்ளவர்களை மூளைச்சலவை செய்து சாமியாராக மாற்றும் முயற்சியை செய்வார்கள். அல்லது மத வெறியனாக மாற்றவும் முயற்சிப்பார்கள்.
பகுத்தறிவும், சமூக அக்கறையும் கொண்ட முகநூல் நண்பர்களே சீரழிந்து கொண்டுள்ள நதிகளை நாம் நாளை கூட மீட்டுக்கொள்ளலாம். முதலில் இந்தச் சமூக விரோதியிடம் இருந்து நம் குழந்தைகளையும், இளைஞர்களையும், குறிப்பாக இளம் பெண்களையும் மீட்போம்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைத் தற்கொலைக்குத் தூண்டும் “புளுவேல்” விளையாட்டை விடவும் மோசமானது, ஜக்கி வாசுதேவனின் நதிகளை மீட்போம் என்ற விளையாட்டு.
– பெ.சிவசுப்ரமணியம்