டிடிவி.தினகரனுக்கு சீமான் ஆதரவு?

அதிமுகவில் இப்போது பலத்த சண்டை நடந்துகொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவுப்படி சசிகலா குடும்பத்தாரை அதிமுகவிலிருந்து முற்றாக ஒழித்துவிடவேண்டும் என்று இபிஎஸ் அணி செயல்படுகிறது. இந்நிலையில் பாஜகவின் இந்த கட்டற்ற அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிரான மனநிலை காரணமாக டிடிவி.தினகரனுக்கு ஆதரவாகப் பேசிவருகின்றனர்.

இவ்விடயத்தில் சீமான் வெளிப்படையாகப் பேசாத நிலையில், அவருடைய நாம்தமிழர்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞரும் தீவிர செயற்பாட்டாளருமான நல்லதுரை, தினகரன் கட்சி ரீதியாக எடுக்கும் நடவடிக்கைகள் சட்டப்படி சரியானதே என்று சொல்லியிருக்கிறார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள முகநூல் பதிவில்….

அ.தி.மு.க வில் பலரை அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் திரு. டி.டி.வி .தினகரன் நீக்கி வருகிறார்…..
அதுபோல முன்னாள் மந்திரியும் , தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளரும், , கட்சியின் அமைப்புச் செயலாளரும், எம்.பி., யுமான திரு.ஆர். வைத்திலிங்கத்தை அவர் வகித்த பொறுப்புகளில் இருந்து மட்டுமல்ல , கட்சியிலிருந்தே நீக்கி இருக்கிறார் தினகரன்……
அவருக்கு அதிகாரமில்லை என்று வெற்றுக் கூச்சலிடுகிறார் ….. வைத்தி .
அண்ணன் வைத்தி அவர்களே …. இனியாவது உங்கள் கட்சியின் அமைப்பு விதிகளை படியுங்கள் …
விதி 5 (7) சொல்கிறது…..
Members shall have no right to resort to court proceedings regarding party matters.if any member of the the partyresorts to any court proceedings against the party general secretariesdecision he shall cease to be a Primary member of the party ….. என்று சொல்கிறது…..
விதி 21 … சொல்கிறது…
DEPUTY GENERAL SECRETARY….
The General Secretary will nominate Deputy General Secretaries.
The Deputy General Secretaries shall assume the powers of the General Secretary in the absence of the General Secretary and perform the functions of the General Secretary … என்று உள்ளது….
இப்போது சொல்லட்டும், தினகரனின் உத்தரவு செல்லாது என்று…..
அப்படியானால் வைத்தி உள்ளிட்ட நீக்கப்பட்ட தலைவர்கள் ?……..
கோர்ட்டுக்கு போக வேண்டியது தானே ……..
எப்படியோ … குதிரை போன பின் லாயத்தை பூட்ட நினைப்பவன் மூடன்…..
ஏறி வந்த ஏணியை உதைப்பவன் துரோகி…..

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response