அரவிந்த்சாமி-அமலாபாலின் மாலத்தீவு பேமிலி ட்ரிப்..!


தமிழில் பிரண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன் என இன்றளவும் ரசித்து மகிழும் சித்திரங்களை கொடுத்தவர தான் பிரபல மலையாள இயக்குனர் சித்திக். அவரது அடுத்த தமிழ் வரவு தான் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மம்முட்டி, நயன்தாராவை வைத்து இவர் இயக்கிய ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ வெற்றிப்படத்தின் ரீமேக்காகத்தான் இந்தப்படம் உருவாகிறது.

அரவிந்த்சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் இந்தப்படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப்ஷிவ்தசானி நடிக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் நிகிஷா பட்டேலும் நடிக்கிறார்.

தற்போது சென்னையில் இறுதிகட்ட படபிடிப்பு நடந்து வரும் நிலையில், படத்தின் மீதமுள்ள ஒரு பாடல் காட்சிக்காக படக்குழுவினர் வருகின்ற 27-ஆம் தேதி மாலத்தீவிற்கு செல்கின்றனர்.

Leave a Response