பிக்பாஸ் – ஒரு வழியாக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிகழ்வு நடந்துவிட்டது

பிக்பாஸ்

ஒரு வழியாக நாம் ஆவலுடன் எதிர்பார்த்த கால்சியம் காயூவின் வெளியேற்றம் நடந்துவிட்டது. நாம் எதிர்பார்த்த மாதிரியே வழவழா, கொழகொழாவென்றும் அது நடத்தி வைக்கப்பட்டது.

ஜூலி போனபோது வைக்கப்பட்ட கேள்விகள் என்ன, காட்டப்பட்ட குறும்படம் தான் என்ன! ஆனால் காயூ போகும்போது, அந்த அறச்சீற்றம் எல்லாம் காணாமல் போய்விட்டது. அதில் நமக்கு ஆச்சரியம் ஏதும் இல்லை தான்!

ஓவியாவின் மனநலப் பாதிப்புக்கு முக்கியக் காரணமே, ஒழுங்காக இருந்த ஆரவ்விடம் ‘உன் கரியர் வேஸ்ட் ஆகிடும்’ என்று தூபம் போட்ட காயத்ரி மந்திரம் தான். அது அன்றும் காட்டப்படவில்லை, இன்றும் அதைப் பற்றிக் கேட்கப்படவில்லை. ஆரவ்வை ஓவியாவிடம் இருந்து பிரித்து, தன் அருகிலேயே வைத்துக்கொண்ட அல்பப்புத்தியைப் பற்றியும் ஒரு கேள்வியும் இல்லை. அது தானே ஓவியா வெளியேற முக்கியக் காரணம்? வையாபுரிக்குத் தெரிந்த நியாயம், பெரிய மனுசனுக்குத் தெரியாமல் போனது ஏனோ?

ஒரு எச்சை எதிரே வந்தால், ஒரு ஹேர் எதிரே வந்தால் ‘நீ ஏன் இவ்ளோ கேவலமான பிறவியா இருக்கிறே?’ என்று யாரும் கேட்கமாட்டோம். துஷ்டனைக் கண்டால் தூர விலகு(!) என்றோ அல்லது நாகரீகம் கருதியோ ‘போய்த் தொலை சனியனே’ என்று விட்டுவிடுவோம். அதை மிகச்சரியாகப் பயன்படுத்தி, காயூ காப்பாற்றப்பட்டார். பூனைக்கும் தோழன், பாலுக்கும் காவல் என்று இன்றைய கூத்து நடத்தப்பட்டது.

குறைந்த பட்சம் ‘திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்?’ பாடலையாவது காயூவை நோக்கி ஒருவர் பாடியிருக்கலாம்.
ஓவியா போனதுமே பிக்பாஸ் பார்ப்பதை நிறுத்தியாகிவிட்டது. மிச்சம் 1% ஆர்வம், எச்சை மாஸ்டர் வெளியேறுவதைப் பார்க்க வேண்டும் என்று இருந்தது. அதுவும் இன்று முடிந்தது.
எப்படியோ, பிக்பாஸைப் பிடித்த பீடை இன்று ஒழிந்தது.

Leave a Response