டெல்லியில் சீமான்

சீக்கிய இனப்படுகொலை 30 ஆவது வருட நினைவேந்தல் நாளாகிய நேற்று (3-நவம்பர்-2014) இந்திய தலைநகரில் “தமிழர், சீக்கியர், காஷ்மீரி, நாகர்” ஆகிய தேசிய இனங்கள் ஒன்றுகூடி இனப்படுகொலைக்கு நீதிகேட்டு “நீதி உரிமை பேரணி மற்றும் பொதுக்கூட்டம்” புதுடெல்லியில்  நடத்தியது.
தல் கல்சா அமைப்பு ஒருங்கிணைத்த இப்பேரணியில் காஸ்மீர்ய ஹுரியத் கான்பாரசன்ஸ் தலைவர் செய்யது அலிஷா கிலானி, சீக்கிய தல் கல்சா தலைவர் கன்வர்பால் சிங், நாகா மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் வெனுஹ்  ஆகியோரோடு தமிழர்கள் சார்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் கலந்துகொண்டார். “தேசிய இனங்களை ஒன்றுபடுத்துவோம்.. இனப்படுகொலைகளை அம்பலப்படுத்துவோம்..” என்ற முழக்கத்தோடு நடைபெற்ற இப்பேரணியில் நாம் தமிழர் கட்சியினர் தமிழகம் மற்றும் மும்பையிலிருந்து டெல்லி வந்திருந்தனர்.பங்களா சாஹிப் குருத்வாராவில் தொடங்கிய பேரணி ஜந்தர் மந்தர் வரை வந்தடைந்தது. பின்பு ஜந்தர் மந்தரில் நடந்த பொதுக்கூட்டத்தில்  சீமான் சிறப்புரையாற்றினார். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் தன்னாட்சி என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தியாவில் ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒழித்து தமிழ்நாட்டை தமிழரும், பஞ்சாபை சீக்கியரும், காஷ்மீரை காஸ்மீரியும், மற்ற தேசிய இனங்கள் அந்த அந்த மாநிலத்தை ஆள்வது, மத்தியில் அனைவரும் சேர்ந்து கூட்டாட்சி செய்வது என்ற மாற்று அரசியலை முன்னெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி பெரும் முகமாக அம்மக்களுக்கான தனி நாடு தமிழீழம் மலரவும், தமிழகத்தின் உரிமைக்காகவும்  இந்தியாவில் இருக்கும் மற்ற தேசிய இனங்கள் தமிழினத்திற்கு உதவ வேண்டும் அதே போல் மற்ற தேசிய இன பிரச்சனைக்கு தமிழினம் என்றும் துணை நிற்கும் என்றும் வலியுறுத்தினார்.

கூட்டம் முடிந்ததும் அனைத்து தலைவர்களும் டெல்லியில் உள்ள ஐநா தலைமை அலுவலகம் சென்று தேசிய இனங்களின் நீண்டகால பிரச்சனைகளுக்கு நீதி பெற்றுத்தர மனு அளித்தனர்.   ஈழப்படுகொலைக்கு தீர்வாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டியும், தமிழக மீனவர் படுகொலைக்கு தீர்வாக கச்சதீவை மீட்க கோரியும், அணு உலையை நிறுத்தக்கோரியும், நதிநீர் சிக்கல்களை களைய வேண்டியும் மனு அளிக்கபட்டது.

Leave a Response