
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட்ட ஓவியா, தானாக வெளியேறினார். இதையடுத்து ஓவியாவின் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
ஓவியா வெளியேறிவிட்டதால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்க மாட்டோம் என்றும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பலமுறை மக்கள் ஆதரவால் தப்பித்த ஜுலி, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். மற்றவர்கள் வெளியேறியபோது சாதாரணமாக அனுப்பியவர்கள் ஜூலியை மட்டும் அவமானப்படுத்தி அனுப்பியதாகக் குற்றச்சாட்டு இருக்கிறது.
ஓவியாவும் ஜூலியும் இல்லாத நிலையில் புதிதாக வந்த பிக்பாஸ் விளம்பரப்படத்தில், ரைசாவை புதிய தலைவராக நியமிக்கிறார் பிக்பாஸ், ஆனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாத சக்தி, ஆரவ் நீயே தலைவராக இரு என்கிறார்.
இதனைத் தொடர்ந்து சினேகன் வையாபுரியிடம் ஏன் ரைசா தலைவரா இருந்துட்டுப் போகட்டுமே. எதுக்கு நடுவுல சக்தி குறுக்கிடுறார். அப்படினா என்ன அர்த்தம் என்று கேட்கிறார்.
ரைசாவும், சினேகன் பேசும்போது ஓவியா மற்றும் ஜூலி விஷயத்தில் காயத்ரி நடந்து கொண்டது சுத்தமாகப்பிடிக்கவில்லை என்றும், சக்தி இல்லாமல் காயத்ரி இல்லை என்றும் கூறுகிறார்.
மொத்தத்தில், இந்தப் புதிய காணொலி ரசிகர்களுக்கு மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


