
சூதுகவ்வும், தெகிடி படங்களில் நடித்த அசோக் செல்வனுக்கு இன்னும் சொல்லிக்க்ல்லும் அளவுக்கு பிரேக் தரும்படியான படம் எதுவும் அமையவில்லை.. இந்தநிலையில் ‘கூட்டத்தில் ஒருவன்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். .. இந்தப்படத்தின் கதாநாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்க, படத்திற்கு இசையமைத்துள்ளார் நிவாஸ் கே.பிரசன்னா. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார்.. இவர் விகடன் பத்திரிகையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்..
“சூப்பராக படிக்காத, அதேசமயம் மோசமாகவும் இல்லாத மிடில் பெஞ்ச் மாணவர்களின் வாழ்க்கை தான் இந்த கூட்டத்தில் ஒருவன்’ படத்தின் கரு. இந்தப்படத்திற்காக தனது தோற்றம், உடல்மொழி என அனைத்திலும் மாறுபாட்டை கொண்டுவந்துள்ளாராம் அசோக் செல்வன். இந்தப்படம் நிச்சயம் தன்னை அடுத்த இடத்திற்கு உயர்த்தும் என நம்புகிறார் அசோக் செல்வன்.


