திரையுலகில் புது ரத்தம் பாய்ச்சுமா விக்ரம் வேதா..?


இன்றைய தமிழ் சினிமாவில் மல்டி ஸ்டாரர் எனப்படும் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட கதாநாயகர்கள் இனைந்து நடிக்கும் படங்கள் என்பது அரிதாகத்தான் வெளியாகின்றன.. இந்தப்படங்களை கவனமாக கையாண்டால் வெற்றிக்கு உத்தரவாதம் நிச்சயம் என்றாலும், நிறைய பேர் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தும் கோட்டை விடவே செய்கிறார்கள்.. ஜீவா, பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் அதற்கு ஒரு உதாரணம்.

ஆனால் தற்போது விஜய்சேதுபதி, மாதவன் என இரண்டு நடிப்பு புலிகளை வைத்து மல்டி ஸ்டாரர் படமாக ஊருவாகியுள்ள ‘விக்ரம் வேதா’ படம் ஆரம்பித்த நாளில் இருந்தே எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது. இரட்டை இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஹீரோக்கள் இருவருமே வில்லத்தனம் கலந்த கேரக்டர்களில் நடித்துள்ளது தமிழ் சினிமாவுக்கு புதுசு..

இந்தப்படம் வெற்றி பெற்றால் இரண்டு, மூன்று ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் புதிய சூழல் உருவாக வாய்ப்புள்ளது என்றே திரையுலகில் பேசிக்கொள்கிறார்கள்.. இந்தப்படம் வரும் ஜூலை-21ஆம் தேதி வெளியாகிறது.

Leave a Response